2025 மே 08, வியாழக்கிழமை

நடுவானில் பற்றிய தீ; அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

Freelancer   / 2024 ஜூன் 17 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடுவானில் பறந்து கொண்டிருந்த நியூசிலாந்தின் விமானம் ஒன்றில் தீடிரென தீ பற்றியதில் விமானத்தின் ஒரு எஞ்சின் செயலிழந்த நிலையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு வெர்ஜீன் அவுஸ்திரேலியா விமான நிறுவனத்தின் விமானம் நேற்று இரவு (16) புறப்பட்டது.

இந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துகொண்டிருந்தனர். குயின்ஸ்டவுனில் இருந்து விமானம் புறப்பட்டு 50 நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தது.

அப்போது, விமான எஞ்சினில் திடீரென தீ பற்றியது. இதனால், விமானத்தில் ஒரு எஞ்சின் முழுவதும் செயல் இழந்ததையடுத்து, விமானம் அவசர அவசரமாக குயின்ஸ்டவுன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட பின்னர், மாற்று விமானம் மூலம் மெல்போர்ன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது அதன் எஞ்சின் மீது பறவைகள் மோதியதாலே தீ பற்றியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.S

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X