2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நண்பருக்கு சிங்கக்குட்டியை பரிசளித்த ’யூ-டியூபர்’

Freelancer   / 2025 பெப்ரவரி 05 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானை சேர்ந்த 'யூ-டியூபர்' ரஜப்பட் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்ற அவரது நண்பரும், பிரபல யூ-டியூபருமான ஓமர் டோலா என்பவர் நண்பருக்கு வித்தியாசமாக பரிசளிக்க முடிவு செய்து ஒரு சிங்கக்குட்டியை திருமண பரிசாக வழங்கினார்.

இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் விமர்சனங்களை பதிவிட்டனர். 

இதையடுத்து வன அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து சிங்கக்குட்டியை மீட்டு உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக  வழக்கும் தொடரப்பட்டது.

அப்போது நீதிபதி, யூ-டியூபர் ரஜப்பட் உயிரியல் பூங்காவில் சிங்கக்குட்டியை பராமரிக்க நிதியுதவி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ஒவ்வொரு மாதமும் 5 நிமிடங்கள் மக்களுக்கு தேவையான ஒரு விடயத்தை எடுத்துரைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X