Editorial / 2019 மே 28 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில், லொகன்கா கிராமத்துக்கருகில் மை-என்டொம்பே நதியில் படகொன்று மூழ்கியதையடுத்து, குறைந்தது 30 பேர் இறந்துள்ளதுடன், டசின் கணக்கானோரைக் காணவில்லை என அஞ்சப்படுவதாக உள்ளூர் அதிகாரிகளும், ஊடக அறிக்கைகளும் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை இரவு குறித்த விபத்து இடம்பெற்ற நிலையில் தற்போது வரையில் தாங்கள் 11 சிறுவர்கள், 12 பெண்கள், ஏழு ஆண்களினது என 30 சடலங்களை தாங்கள் மீட்டுள்ளதாக இனொன்கோ மேயர் சைமன் எம்போ வெம்பா, ஊடகங்களிடம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
படகில் எத்தனைப் பேர் இருந்தனர் என உடனடியாகத் தெரியவராதபோதும், சில நூற்றுக்கணக்கானோர் படகில் இருந்ததாக அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். நதியிலிருந்து 170 பேர் மீட்கப்பட்டிருந்தனர்.
கொங்கோ ஜனநாயக் குடியரசில் வழமையாக படகுகள் பயணிகள், சரக்குகளால் நிறைந்திருக்கின்ற நிலையில், உத்தியோகபூர்வ கணக்கெடுப்பில் படகிலுள்ள அனைவரும் உள்ளடக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொங்கோ ஜனநாயகக் குடியரசிலுள்ள நீர்நிலைகளால் இணைந்துள்ள பாரியளவிலான ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர்கள் வீதிகளால் இணைக்கப்படாமல் இருக்கின்ற நிலையில், அந்நாட்டில் படகுகளால் பயணம் செய்வதே பொதுவான போக்குவரத்து முறையாகக் காணப்படுகின்றது.
அந்தவகையில், தேவையானளவு உயிர் காப்பு அங்கிகள் இல்லாமல் காணப்படும் சில படகுகள் உட்பட்ட பாழடைந்த படகுகளில் அதிகளவான பயணிகள், சரக்குகளால் படகு விபத்துகள் அடிக்கடி நிகழுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .