Editorial / 2019 ஜூன் 12 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அ.தி.மு.கவின் முன்னாள் பொதுச் செயலாளரான சசிகலாவை, நன்னடத்தை விதிகளின் கீழ் விடுவிக்கலாமென, கர்நாடக சிறைத்துறை பரிந்துரை முன்வைத்துள்ளது.
கர்நாடக அரசாங்கத்துக்கு அம்மாநில சிறைத்துறை அனுப்பியுள்ள கடிதத்திலேயே, சசிகலாவை விடுப்பதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த தகவலுக்கமைய 1 அல்லது 2 வருடங்களில் விடுதலை அடைவதற்கு வாய்ப்புள்ளதாக சிறைசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் தமிழக முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர், குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, மூவரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள், சசிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுவிப்பது குறித்து அம்மாநில அரசாங்கத்துக்கு பரிந்துரை கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .