Editorial / 2019 ஜூன் 25 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாகவுள்ள நளினியை எதிர்வரும் 5ஆம் திகதி நேரில் முன்னிலைப்படுத்துமாறு, வேலூர் சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இங்கிலாந்தில் வசிக்கும் மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணை அனுமதி கோரிய நளினியின் மனு மீதான வழக்கு, இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆயுள் தண்டனை கைதிகள், வருடத்துக்கு இரு முறை பிணையில் வெளிவருவதற்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளன என்றும் ஆனால் கடந்த 28 வருடங்களாக தொடர்ச்சியாக சிறையிலேயே உள்ள தனக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு நளினி, தனது சட்டத்தரணியூடாக, மனுவொன்றை, உச்ச நீதிமன்றத்தில் கையளித்திருந்தார்.
மேலும் மனு மீதான விசாரணைக்கு, தானே நேரில் முன்னிலையாகி வாதிட அனுமதி வழங்க வேண்டுமெனவும் நளினி கோரியிருந்தார்.
அத்துடன் நளினி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம் நீதிபதிகள், அவர் காணொளி ஊடாக முன்னிலையாவதற்கு விருப்பமா என்பதை கேட்டு, நீதிமன்றுக்கு அறியத்தருமாறு உத்தரவிட்டனர்.
இவ்வாறு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நளினியிடம் அவரது சட்டத்தரணி கேட்டபோது, நளினி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த மனு மீதான வழக்கு விசாரணைகள், நேற்று மீண்டும் இடம்பெற்றபோது, நளினியை எதிர்வரும் 5ஆம் திகதி பிற்பகல் 2.15 மணியளவில் நேரில் முன்னிலைப்படுத்துமாறு, சிறைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 minute ago
13 minute ago
20 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
20 minute ago
24 minute ago