Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 10 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. 1973-ம் ஆண்டு நடைபெற்ற யோம் கிப்பர் போருக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் ராணுவ வீரர்களை முதல்முறையாக இஸ்ரேல் திரட்டியுள்ளது.
இருதரப்பிலும் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பலரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளை பிடித்து வைத்துள்ளனர். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
இந் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு “இஸ்ரேல் போரில் உள்ளது. நாங்கள் இந்த போரை விரும்பவில்லை. இது மிகவும் கொடூரமான வழியாக எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் போரை தொடங்காத போதிலும், இஸ்ரேல் போரை முடிக்கும்'' என கூறியுள்ளார்.
மேலும், இதற்கு ஹமாஸ் விலை கொடுப்பார்கள். நீண்ட நாட்களுக்கு இது நினைவில் இருக்கும் வகையில் இருக்கும் என எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .