2025 மே 14, புதன்கிழமை

“நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது”

Freelancer   / 2023 ஒக்டோபர் 10 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் பல இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் அரசை விமர்சித்துள்ளார். சமீபத்தில் கைதிகள் பரிமாற்றம் செய்ததுடன், ஈரானின் 6 பில்லியன் டாலர் பணத்தை பரிமாற்றம் செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்ததை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்

இந் நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் “இஸ்ரேரில் குழந்தைகள், இளைஞர்கள் என பலர்  படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இஸ்ரேலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஒருபோதும் நடந்திருக்காது'' என கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .