2025 மே 15, வியாழக்கிழமை

நாயுடன் கொஞ்சி விளையாடிய திருடன்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடுகளில் நாய் வளர்ப்பதற்கு முக்கிய காரணம் திருடர்களிடம் இருந்து வீட்டை காக்கும் என்பது தான். ஆனால் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அதற்கு நேர்மாறாக உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்குட்பட்ட சாண்டியாகோ நகரில் ஒருவரின் வீட்டு கேரேஜூக்குள் விலை உயர்ந்த சைக்கிள்கள் இருந்துள்ளனது. சம்பவத்தன்று இரவு வாலிபர் ஒருவர் அங்கு நுழைந்து ரூ.1.7 இலட்சம் மதிப்பிலான சைக்கிளை திருடி செல்ல முயன்றார். அப்போது உள்ளே இருந்த நாய் ஒன்று திருடனை நோக்கி வந்தது.

நாயை கண்டதும் திருடன் அங்கிருந்து செல்லாமல், வெளியே எடுத்த சைக்கிளை உள்ளே விட்டுவிட்டு அந்த நாயுடன் கொஞ்சி விளையாடினார்.

அப்போது அந்த நாயை பார்த்து அவர், 'ஐ லவ் யூ டூ' என்று கூறுகிறார். மேலும் நாயுடன் சிரித்து விளையாடுவது போன்ற காட்சிகளும் அங்குள்ள சி.சி.டி.வி கமெராவில் பதிவாகி உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .