Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 மே 29 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், நிதி நெருக்கடியால் தனக்கு பிடித்தமான விமானத்தை விற்பனை செய்துள்ளதாகவும் அந்த விமானத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.83 கோடி எனவும் தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள பைடனின் பதவிக்காலம் இந்தாண்டு இறுதியில் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சில மோசடி வழக்குகளில் டிரம்ப்க்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளதால் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். இதனால் அவர் தன்னுடைய தனி விமானம் ஒன்றை ஈரானிய - அமெரிக்க கட்டுமான நிறுவன தலைவர் மெஹர்தாத் மொயதியிடம் விற்பனை செய்துள்ளார்.
1997ஆம் ஆண்டு டிரம்ப் வாங்கிய இந்த விமானம், மணிக்கு 1136 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் மிக்கது என்பதுடன், வானில் 51 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டதாம். மேலும், இந்த விமானத்தில் பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.S
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago