2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நியூயோர்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்

Freelancer   / 2025 மே 18 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான குவாக்டே மோக் என்ற கப்பல், 15 நாடுகளில் உள்ள 22 துறை முகங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு தனது பயணத்தை கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி தொடங்கியது. 

297 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட இக்கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 277 பேர் பயணம் செய்தனர்.

அந்த கடற்படை பாய் மரக் கப்பல் அமெரிக்காவின் நியூயோர்க்குக்கு சென்றது. அங்குள்ள புரூக்ளின் பாலத்தை கடந்து செல்ல முயன்றது. அப்போது கப்பலின் கம்பங்கள், புரூக்ளின் பாலத்தில் மோதியது. பாலத்தின் மேல் தளத்தில் கப்பல் மோதிய போது கம்பங்கள் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில், கப்பலில் இருந்த 19 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். பாலத்தின் மீது கப்பல் மோதும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாக மெக்சிகோ கடற்படை கூறும்போது, பயிற்சி கப்பலான குவாக்டேமோக், புரூக்ளின் பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் சேதமடைந்தது. இதனால் அதன் பயணத்தை தொடர முடியவில்லை. பணியாளர்கள் மற்றும் பொருட்களின் நிலை கடற்படை மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.

மெக்சிகோ வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, அமெரிக்காவுக்கான தூதரும் நியூயார்க்கில் உள்ள மெக்சிகோ துணைத் தூதரக அதிகாரிகளும் "பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்தது. இந்த விபத்தில் 142 ஆண்டுகள் பழமையான புரூக்ளின் பாலத்துக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X