2025 மே 19, திங்கட்கிழமை

நிறைவேற்று அதிகாரிகளை வெளியேற்றியது எவர்கிராண்டே

Freelancer   / 2022 ஜூலை 31 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டே, அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம நிதி அதிகாரி ஆகியோரை உள்ளக விசாரணைக்குப் பின்னர் வெளியேற்றியுள்ளது.

நிறுவனத்தின் சொத்துச் சேவைப் பிரிவில் இருந்து வங்கிகள் ஏன் 2 பில்லியன் டொலர்களுக்கு  மேல் பறிமுதல் செய்தன என்ற விசாரணைகளின் பின்னரே அவர்கள் வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டுள்ளனர்.

கடும் சிக்கலில் சிக்கியுள்ள எவர்கிராண்டே மீண்டெழுவதற்காக போராடி, 300 பில்லியன் டொலர் கடன்பட்டுள்ள கடனாளிகளுடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை எட்டுவதற்குப் பணிபுரியும் போது இந்த இராஜினாமாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் சொத்து சேவைப் பிரிவான எவர்கிராண்டே ப்ரொப்பர்ட்டி சர்வீசஸ் நிறுவனத்திடமிருந்து 13.4 பில்லியன் யுவான் (2 பில்லியன் டொலர்) வைப்புத் தொகையை ஏன் வங்கிகள் எதிர்பாராதவிதமாக கைப்பற்றின என்பதற்கான உள்ளக விசாரணையைத் தொடர்ந்து நிர்வாகிகள் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மூன்றாம் தரப்பினருக்கு கடனைப் பெற அனுமதிக்கும் உத்தரவாதமாகப் பயன்படுத்தப்பட்டதால் குறித்த பணம் கைப்பற்றப்பட்டதாக புலனாய்வாளர்கள் வெளிக்கொணர்ந்ததாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே அவர்களை இராஜினாமா செய்யுமாறு நிர்வாக சபையால் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.

சீனாவின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக இருந்த எவர்கிராண்டே கடும் சிக்கலில் சிக்கியுள்ளதுடன், அதன் தலைவர் ஹுய் கா யான் தனது சொந்த சொத்துகளைப் பயன்படுத்தி சில கடன்களைச் செலுத்தி வருகிறார்.

சீனாவின் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் பாரிய அபிவிருத்திகளுக்கு நிதியளிப்பதற்காக நீண்ட காலமாக கடன்களைச் சார்ந்து இருந்தன.

பீஜிங்கின் உந்துதல் பணப்புழக்கங்களைக் குறைத்ததால், சீனாவின் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சிக்கலில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X