Editorial / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மலப்புரம் மாவட்டத்தில் கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட நிலச்சரிவில் 20 சிறுவர்கள் உள்ளிட்ட 59பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியது.
இதனையடுத்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இன்று (11) மூன்றாவது நாளாகவும் அங்கு மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போதே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் கடலோர மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தின் காரணமாக முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன், ரயில், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
11 minute ago
18 minute ago
22 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
22 minute ago
48 minute ago