Freelancer / 2024 மே 26 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் புதையுண்டவர்களின் எண்ணிக்கை 670 ஆக அதிகரித்து இருக்கின்றது. இது தொடர்பான தகவலை அதிகாரப்பூர்வமாக ஐ நா அமைப்பு வெளியிட்டுள்ளது.
பப்புவா நியூகினியாவில் நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரும் நிலச்சரிவில் தற்பொழுது வரை 670 பேர் மண்ணில் புதைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி ஏற்கனவே 100 பேர் பலியான அறிவிப்பு வெளியாகிய நிலையில் இந்த தகவல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் நிலச்சரிவில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதை கூட செய்யமுடியாத அளவிற்கு அங்கு மோசமான நிலை நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.S
15 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago