2025 மே 15, வியாழக்கிழமை

நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் லுனா 25

Freelancer   / 2023 ஓகஸ்ட் 17 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான் விண்கலத்தை கடந்த ஜூலை 14 ஆம் திகதி  விண்ணில் செலுத்தியது. சந்திரயான் விண்கலம் தற்போது நிலவை நெருங்கியுள்ளது. சுமார் 100 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவை நெருங்கி சுற்றி வருகிறது. வரும் 23 ஆம் திகதி மாலை நிலவின் தென் துருவத்தில் மென்மையான முறையில் சந்திரயான் 3 தரையிறங்க உள்ளது.

இந் நிலையில், ரஷ்யாவும் லுனா 25 என்ற விண்கலத்தை நிலவின் ஆராய்ச்சிக்கு அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் கடந்த 11 ஆம் திகதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. வெறும் 5 நாட்களில் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் லுனா 25 விண்கலம் நுழைந்துள்ளது. வரும் 21 ஆம் திகதி இந்த விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .