Editorial / 2019 ஜூலை 31 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானில் வீதியோரக் குண்டொன்றால் பஸ்ஸொன்றில் பயணித்த சிறுவர்கள் உள்ளடங்கலாக குறைந்தது 35 பேர் இன்று (31) கொல்லப்பட்டதுடன், 27 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாகாணத் தலைநகர்களான ஹெராட், கந்தகாரை இணைக்கும் பிரதான வீதியில், ஃபராஹ் மாகாணத்தின் அப் கொஹ்ர்மா பகுதியிலேயே குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக அம்மாகாண பொலிஸ் பேச்சாளர் மொஹிபுல்லாஹ் மொஹிப் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் வெளிநாட்டுப் படைகளை இலக்கு வைப்பதற்காக குண்டானது தலிபான் ஆயுததாரிகளால் புதிதாகத் தாக்கப்பட்டிருந்ததாகவும் இறந்த அல்லது காயமடைந்த பெரும்பாலோனோர் சிறுவர்கள், பெண்கள் என மொஹிபுல்லாஹ் மொஹிப் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எந்தவொரு ஆயுதக்குழுவும் இக்குண்டுவெடிப்புக்கு உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபராஹ் மாகாணமானது ஈரானுடனான எல்லையில் அமைந்துள்ளது.
இதேவேளை, இக்குண்டுவெடிப்பு தலிபானால் நிகழ்த்தப்படவில்லை எனவும், தாங்கள் குறித்த சம்பவம் குறித்து விசாரணை செய்வதாகவும் தலிபானின் பேச்சாளர் ஸபிஹுல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்க அதிகாரிகளுக்கும், தலிபான் பிரதிநிதிகளுக்குமிடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிப்பதற்கு முன்பாகவே குறித்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
18 minute ago
22 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
22 minute ago
48 minute ago