2025 மே 15, வியாழக்கிழமை

நேபாள பிரதமரின் மனைவி சீதா காலமானார்

Janu   / 2023 ஜூலை 12 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹாலின் மனைவி சீதா தஹால் மாரடைப்பால் காலமானார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீதா தஹால் அண்மையில் வீடு திரும்பினார். இன்று காலை ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் காத்மாண்டுவில் உள்ள நார்விக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டாலும், சிகிச்சை பலனின்றி, புதன்கிழமை காலை 8.33 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .