Editorial / 2019 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, ப.சிதம்பரம் இன்று, சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ப.சிதம்பரம் கைது குறித்து குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி
“ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. மத்திய பாஜக அரசு தவறான முன்னுதாரணத்தை உருவாக்க முயற்சிக்கிறது.”
கார்த்தி சிதம்பரம்
“இந்தியாவில் உள்ள முக்கிய விவகாரங்களை திசை திருப்பவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க யாரையோ திருப்தி படுத்த இதை செய்கிறார்கள். என் தந்தை தலைமறைவாக இருந்தது இல்லை. ஒரு தனி மனிதர் 24 மணி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.”
திருமாவளவன்
“ப.சிதம்பரம் ஒரு பயங்கரவாதி அல்ல; நாட்டின் உள்துறை, நிதி அமைச்சராக இருந்தவர். அவருக்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும்.”
டி.கே.எஸ்.இளங்கோவன்
“ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கையே என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்பிணை விசாரணைக்கு வரும் நிலையில் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.”
கராத்தே தியாகராஜன்
“எந்தவித நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் காலத்தில் காங்கிரஸை வழிநடத்தும் அளவிற்கு தகுதியானவர் ப.சிதம்பரம். இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்காதது ஏன்?.”
மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
“நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை ப.சிதம்பரம் கைது காட்டுகிறது. எந்த சட்ட வரையறைக்கும் உட்பட்டு ப.சிதம்பரம் கைது செய்யப்படவில்லை. ப.சிதம்பரம் வெளிநாடோ அல்லது வேறு எங்கேயோ சென்று தலைமறைவாகி விடமாட்டார். பழிவாங்கும் நோக்கத்தோடு ப.சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.”
7 minute ago
17 minute ago
24 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
24 minute ago
28 minute ago