2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பகல் நேர சுற்றுலா வரி உயர்வு

Freelancer   / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில், பகல் நேர சுற்றுலா வரியை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரம் புகழ் பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இது யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அங்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

அதே சமயம் அவர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளால் அந்த நகரம் வெகுவாக மாசு அடைகிறது. எனவே அங்கு பகல் நேர சுற்றுலா வரியை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன்படி வெனிஸ் நகருக்கு பகல் நேர சுற்றுலாவிற்கு செல்ல 3 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்பவர்களுக்கு 5 யூரோ  கட்டணமும், அதற்கு பிறகு முன்பதிவு செய்பவர்களுக்கு 10 யூரோ கட்டணமும் வசூலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .