2025 ஒக்டோபர் 07, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலை ராணுவத்தின் போராளிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

சமீபகாலமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை குறிவைத்து தாக்கினர். கடந்த மார்ச் மாதம் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்தி 400 பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

பின்னர் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து பயணிகளை மீட்டனர்.

இந்த நிலையில் இன்று ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த ரெயில் குவெட்டா நகருக்கு சென்று கொண்டிருந்தது.

சிந்து-பலூசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் பகுதியில் ரெயில் சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.

இதனால் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்.

உடனே மீட்புக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X