2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

பங்களாதேஷ் தொழிற்சாலை தீ விபத்தில் 10 பேர் இறந்தனர்

Editorial   / 2019 டிசெம்பர் 16 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு வெளியே தொழிற்சாலைத் தீ விபத்தொன்றில் குறைந்தது 10 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

கஸிபுர் கைத்தொழில் மாவட்டத்திலுள்ள சிறிய காற்றாடி தொழிற்சாலையொன்றை நேற்று  மாலையில் தீ சூழ்ந்து கொண்டிருந்த நிலையில், இரண்டரை மணித்தியால போராட்டத்துக்குப் பின்னர் தீயை தீயணைப்புப்படைவீரர்கள் அணைத்துள்ளனர்.

இந்நிலையில், சிதிலமடைந்துள்ள தொழிற்சாலையிலிருந்து 10 சடலங்களை தீயணைப்புப் படைவீரர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும், மேலும் இருக்கக்கூடிய பாதிக்கப்பட்டவர்களை தேடுவதாக தீயணைப்புப்படையின் பேச்சாளர் ஸில்லூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், 900 சதுர அடி கொண்ட தொழிற்சாலையில் தீ பரவும்போது தொழிற்சாலையில் எத்தனை பேர் இருந்தனர் என அதிகாரிகள் இன்னும் அறிந்திருக்கவில்லை.

இதேவேளை, தீக்கான காரணமும் இன்னும் தெரியவில்லை.

டாக்காவுக்கு வெளியேயுள்ள சட்டரீதியற்ற பிளாஸ்டிக் தொழிற்சாலையொன்று கடந்த வியாழக்கிழமை தீப்பற்றி குறைந்தது 17 பேர் இறந்த நிலையிலேயே மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X