2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

படகு விபத்துகளில் 427 பேர் பலி

Freelancer   / 2025 மே 25 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேசின் கோக்ஸ் பசார் அகதிகள் முகாமில் வசித்து வந்த ரோகிங்கியாக்களில் 267 பேர் படகு மூலம் இந்தோனேசியாவுக்கு செல்ல முயற்சித்தனர். 

அப்போது அவர்கள் சென்ற படகு மியான்மர் கடற்பகுதியில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 201 பேர் உயிரிழந்தனர். அதேவேளை 66 பேர் உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

அதற்கு அடுத்த நாளான 10ஆம் திகதி 247 ரோகிங்கியா அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மற்றொரு படகு கடலில் கவிழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 226 பேர் உயிரிழந்தனர். அதேவேளை 21 பேர் உயிர் பிழைத்தனர். 

இந்த இரு நாட்களில் நடந்த படகு விபத்துகளில் 427 பேர் உயிரிழந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X