Freelancer / 2025 மார்ச் 02 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில், ஆற்றில் படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் யுவான்ஷுய் என்ற ஆறு பாய்கிறது. இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு படகு போக்குவரத்தே பிரதானமாக உள்ளது. அந்த ஆற்றில் ஏராளமான படகுகள் செல்வது வழக்கம்.
இந்நிலையில், படகொன்று பொதுமக்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த போது, அந்த ஆற்றில் எண்ணெய் கசிவை சுத்தம் செய்யும் ஒரு பெரிய படகும் சென்று கொண்டிருந்தது. இதன்போது அந்த படகுகள் ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளானதில், படகில் இருந்த பலர் ஆற்றில் தவறி விழுந்தனர்.
தகவலறிந்த மீட்பு படையினர் அங்கு சென்றதும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. எனினும் இந்த விபத்தில் 11 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
20 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
22 minute ago
1 hours ago