2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பணமோசடி விசாரணை:பிரித்தானியா அமைச்சர் பதவி விலகல்

Freelancer   / 2025 ஜனவரி 15 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் பணமோசடி விசாரணைக்காக, ஹசீனாவின் மருமகளான துலிப் சித்திக், பிரித்தானியா நாட்டின் அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

பிரித்தானியாவில், பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அவருடைய அரசில் லஞ்ச ஒழிப்பு துறை அமைச்சராக இருந்தவர் துலிப் சித்திக் (வயது 42). இந்நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவின் (வயது 77) மருமகளான சித்திக், பங்களாதேஷில் நடந்து வரும் நிதி மோசடி தொடர்பான விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அவரிடம் விசாரணை நடைபெறவுள்ளது. இது பிரித்தானியா பிரதமருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை முதல் தொடர்ந்து நடந்த மாணவர் போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. இதில், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, பங்களாதேஷில் இருந்து தப்பிய ஹசீனா, பின்னர் ஆகஸ்ட் 5ஆம் திகதி இந்தியாவுக்கு வந்து தஞ்சமடைந்துள்ளார்.

இந்நிலையில், சித்திக் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், “தனிப்பட்ட முறையில் நடந்த மறுஆய்வில், நான் மந்திரிக்கான நடைமுறையை மீறவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் முறைகேடாக நடந்து கொண்டேன் என்பதற்கான எந்தவித சான்றும் இல்லை.

எனினும், அரசுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக நான் அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளேன்” என தெரிவித்துள்ளார். 

அவர் பதவி விலகியது பற்றி பிரதமருக்கு விரிவான விளக்கத்துடன் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். அதில், “தேசத்தின் புதுப்பொலிவு மற்றும் உருமாற்றம் ஆகியவற்றுக்காக அரசுக்கு விஸ்வாசத்துடன் செயற்படுவேன்” என்று, அவர் வலியுறுத்தியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X