2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பயங்கரவாதியை மடக்கிய ஹீரோவுக்கு 2.5 மில்லியன் டொலர் பரிசு

Editorial   / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தாக்குதலின் போது, ஆயுதங்கள் ஏதுமின்றி பயங்கரவாதியை மடக்கிப்பிடித்த போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல் அஹமதுவுக்கு 2.5 மில்லியன் டொலர்  பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

 

அவுஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒருவர் பின்னால் இருந்து சாமர்த்தியமாக மடக்கி பிடித்தார். மேலும், எந்த ஆயுதமும் இல்லாமல் வெறும் கைகளால் பயங்கரவாதியை தாக்கி துப்பாக்கியையும் பறித்தார்.
 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அவரது அசாத்திய தைரியத்தை பாராட்ட வைத்துள்ளது. அவர் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அஹமது, 43, என தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல்-அஹமதுவை நேரில் சென்று, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நலம் விசாரித்தார்.
 

அஹமதுவை ஆஸ்திரேலியாவின் ஹீரோ என பாராட்டி இருந்தார். துப்பாக்கிச் சூட்டை சமாளித்து பல உயிர்களைக் காப்பாற்றிய அஹமதுவுக்கு சமூக நன்கொடைகளாக 2.5 மில்லியன்   அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது. கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயங்களுக்கு தற்போது சிகிச்சை பெற்று வரும் அஹமது, தனது மருத்துவமனை படுக்கையிலிருந்தே காசோலையைப் பெற்றார்.
 

உயிர்களைக் காப்பாற்ற அவரது துணிச்சலுக்காக அவர் பாராட்டப்படுகிறார். இரண்டு குழந்தைகளின் தந்தையான அவருக்கு சமூக ஊடகங்கள் மட்டுமல்ல, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க  ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட பிற உலகத் தலைவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து இருக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X