2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

பிரான்ஸில் பாரிய போராட்டம்: 200 பேர் கைது

Freelancer   / 2025 செப்டெம்பர் 11 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி​ரான்ஸில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை பொலி​ஸார் கைது செய்​துள்​ளனர். பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில் 3 நாட்​களுக்கு முன்பு மேற்​கொள்​ளப்​பட்ட நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பிரதமர் ஃபி​ரான்​சுவா பேரூ தோல்​வியடைந்த நிலை​யில், அவரது தலை​மையி​லான அரசு கவிழ்ந்​தது.

பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில் மொத்​தம் 577 உறுப்​பினர்​கள் உள்ள நிலை​யில், நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பேரூக்கு எதி​ராக 364 உறுப்​பினர்​களும், ஆதர​வாக 194 உறுப்​பினர்​களும் வாக்​களித்​தனர்​.19 உறுப்​பினர்​கள் வாக்​கெடுப்பை புறக்​கணித்​த​னர்.

இதன்​மூலம் கடந்த 12 மாதங்​களில் 4-வது பிரதமரை தேர்ந்​தெடுக்​கும் சூழலுக்கு அதிபர் இம்​மானுவேல் மேக்​ரான் தள்​ளப்​பட்​டுள்​ளாா். இதையடுத்து புதிய பிரதம​ராக அந்​நாட்​டின் பாது​காப்​புத்​துறை அமைச்​சர் லெகர்​னுவை அதிபர் இம்​மானுவேல் மேக்​ரான் நியமித்​துள்​ளார். இந்​நிலை​யில் பிரான்​ஸில் புதிய அரசு பதவி​யேற்​ப​தற்கு எதிர்ப்பு தெரி​வித்து போராட்​டங்​கள் வெடித்​துள்​ளன.

இதையடுத்து முக்​கிய பகு​தி​களில் மக்​கள் கூட்​ட​மாக கூடு​வதை தடுத்த பொலிஸார், முன்​னெச்​சரிக்கை அறி​விப்பை வெளி​யிட்டு கண்​ணீர் புகை குண்​டு​களை வீசினர். இதனிடையே, நாட்​டின் மேற்கு பகுதி நகர​மான ரென்ஸ் பேருந்து ஒன்​றுக்கு போராட்​டக்​காரர்​கள் தீ வைத்​தனர். பல்​வேறு இடங்​களில் போராட்​டம் வெடித்​துள்​ள​தால் பொலிஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

பிரான்ஸ் நாடு முழு​வதும் பாது​காப்பு பணி​யில் 80 ஆயிரம் பொலிஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக அந்​நாட்​டின் உள்​துறை அமைச்​சர் புருனோ தெரி​வித்​துள்​ளார். 

போராட்​டத்​துக்கு யாரும் தலைமை தாங்​காமலேயே நாடு முழு​வதும் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதனால் பிரான்ஸ் நாட்​டில் பதற்றமான சூழல் நிலவி வரு​கிறது. போ​ராட்​டங்​களில் ஈடு​பட்​ட​தாக இது​வரை 200 பேரை பொலிஸார் கைது செய்​துள்​ளனர்​. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .