S.Renuka / 2026 ஜனவரி 19 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}




சிலி நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீயால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையான நிலையில், 18 பேர் தீயில் கருகி உயிரிழந்ததுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. தலைநகர் சாண்டியாகோவிற்கு தெற்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள உபிள் மற்றும் பயோபியோ பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
குறிப்பாக, கடலோர நகரமான கான்செப்சியனை ஒட்டிய வறண்ட காடுகளில் தீ இடைவிடாமல் எரிந்து வருவதால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிப்பதாக கூறப்படுகின்றது.
தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தீயணைப்பு வீரர்கள் போராடி வந்தாலும், பலத்த காற்று காரணமாக தீயை அணைக்கும் பணியில் சிக்கல் நீடிக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
காட்டுத்தீ பரவி வரும் இரண்டு பிராந்தியங்களில் சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் பேரழிவு நிலையை அறிவித்துள்ளார்.
இதுவரை 20,000 ஹெக்டேர் நிலங்கள் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சாண்டியாகோவிற்கு அருகிலுள்ள வால்பரைசோ பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 120 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிலி சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியான பேரழிவு தரும் தீ விபத்துகளைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
11 minute ago
19 minute ago
51 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
51 minute ago
51 minute ago