2025 நவம்பர் 05, புதன்கிழமை

பழங்குடியினர் குடிசையில் ஆலோசனைக் கூட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

காடுகளின் பாதுகாப்பு குறித்து அமேசான் நாடுகளின் தலைவர்கள், பொலிவியாவில் உள்ள பாரம்பரிய பழங்குடியினர் குடிசையில் கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர். 

அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, சர்வதேச கவனத்தை ஈரத்துள்ளது. இந்நிலையில், அமேசான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று(06) பொலிவியாவில் நடைபெற்றது.

இதன்போது காடுகளைப் பாதுகாப்பது, விவசாயம், கால்நடை வளர்ப்பு, கனிமவளத் திருட்டு போன்ற காரணங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பது, காடுகளில் சட்டவிரோத செயல்கள் குறித்து உறுப்பு நாடுகளுக்குள் தகவல் பரிமாற்றம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தட்பவெப்பநிலையை பகிர்ந்து கொள்ளுவது உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அமேசானின் சவால்களை எதிர்கொள்ளுதல், தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைந்து, திறம்பட செயல்படவும் அந்நாடுகளுக்குக்குள் உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

நாளை அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவிருப்பதைக் காரணம் காட்டி, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ அமேசான் நாடுகளின் கூட்டத்திற்கு வருகை தராத போது, வீடியோ கான்பிரன்ஸ் ஊடாக அக்கூட்டத்தில் பங்கேற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X