2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பஸ் மீது கண்ணிவெடி தாக்குதல்:அறுவர் பலி

Freelancer   / 2025 ஜனவரி 05 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில்,அறுவர் உயிரிழந்ததுடன், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம், டர்பெட் நகரில், சனிக்கிழமை (4),  பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த பஸ்சில் 36 பேர் பயணித்தனர். இதில், பலூசிஸ்தானை சேர்ந்த மூத்த பொலிஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரும் பயணித்தனர்.

நியூ பஹ்மென் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, பஸ்ஸை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பஸ்சில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

மேலும், இந்த கண்ணிவெடி தாக்குதலை பலூசிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்தினரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X