2025 நவம்பர் 05, புதன்கிழமை

பா.ஜ.கவின் திட்டங்களுக்கு ’தி.மு.க, காங்கிரஸே எதிரி’

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க), காங்கிரஸ் உள்ளிட்ட எதிரணியினர் தடுத்து வருவதாக, பாரதிய ஜனதாக் கட்சியின்(பா,ஜ.க) தமிழகத் தலைவர் தமிழிசை செந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,  பிரதமர் நரேந்திர மோடியின் பல திட்டங்கள், தமிழகத்துக்கு அதிக பலனையே தந்துள்ளது என்றும் ஆனால், தமிழகத்திலுள்ள எதிரணியினர், மக்கள் மீது அக்கறை செலுத்தாமல், தங்களது அரசியல் பிரவேசத்தை மாத்திரமே கருத்திற்கொண்டு செயற்படுகின்றார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்களிடம் கலவரத்தை ஏற்படுத்துவதற்காகவே, அவர்கள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று கூறிய அவர், இதற்கு சிறந்த உதாரணமாக, அவர்களது ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுப்பாமல், தற்போது எதிர்ப்பு காட்டி வருவதைக் குறிப்பிடலாம் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, மக்களுக்கு பாதகமான வளர்ச்சித் திட்டங்களை வழங்கக்கூடாது என்பதில், பா.ஜ.க உறுதியாக உள்ளது என்றும் அவர் ​மேலும் கூறினார்.

ஆனால், மக்களுக்கான சிறந்தத் திட்டங்களை தவறானத் திட்டங்களாக முன்னிறுத்தி, அவர்களின் வளர்ச்சியை, தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் தடுக்கின்றன என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X