2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பாகிஸ்தானில் அனர்த்தம் 20 பேர் பலி; 150 பேர் படுகாயம்

Freelancer   / 2025 மே 26 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில், இடி-மின்னலுடன் அடைமழை பெய்து வரும் நிலையில், இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக அடைமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (25) அங்கு இடி-மின்னலுடன் அடைமழை பெய்த்து . மேலும் பலத்த சூறவாளி காற்றுடன் பெய்த அடைமழை காரணமாக மாகாணத்தில் அமைந்துள்ள நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் அங்குள்ள லாகூர், ஷேகுபுரா, நங்கனா சாஹிப், அட்டாக், முல்தான், ராஜன்பூர், ஹபிசாபாத், மியான்வாலி, ஜாங் குஜ்ரன்வாலா, லாயா உள்ளிட்ட நகரங்களில் அடைமழை காரணமாக வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

 சூரைக்காற்று காரணமாக வீட்டின் மேற்கூரைகள், மின்சார கம்பங்கள், மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்து தூக்கி வீசப்பட்டன. இதனால் அங்கு மின்சார விநியோகம் தடைபட்டது. மேலும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின.

பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (25) பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, ராட்சர விளம்பர பலகைகள் விழுந்தது உள்ளிட்டவற்றால் பெண்கள், சிறுமிகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தநிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X