2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானுக்கான ஜிஎஸ்பி: ஆய்வுக்குப் பின்னரே ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

Editorial   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

லாஹூர்:

பாகிஸ்தானின் 2020ஆம் மற்றும் 2021ஆம் ஆகிய இரண்டு வருட ஏற்றுமதிக்கான செயல்திறன் அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் மதிப்பீடு செய்தபின்னர் 2024ஆம்ஆண்டுக்கான ஜிஎஸ்பி(GSP+)) நிலையை நீடிப்பது பற்றி முடிவுசெய்யும் என்று பாகிஸ்தானுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் அன்ருல்லா கமினரா வியாழனன்று தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கான (2018-19)  வருடங்களுக்கான அறிக்கை 2020 பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. பாகிஸ்தானின் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான செயல்திறன் அறிக்கை இந்நாட்களில் தொகுப்பில் உள்ளன. ஆதலால் பாகிஸ்தானுக்கான நிலையை நீட்டிப்பது பற்றிய முடிவு இந்த அறிக்கைகளை மதிப்பீடு செய்த பின்னர் 2024 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் எடுக்கப்படும் என்று தூதுவர் லாஹூரில் வர்த்தக சமூகத்தினரிடம் பேசுகையில் கூறினார்.

ஜிஎஸ்பி என்பது 1971 முதல் நடைமுறையில் உள்ள வர்த்தக மற்றும் அபிவிருத்தி  கொள்கை  உபகரணமாகும். கடந்த ஏழு வருடங்களாக ஜிஎஸ்பி திட்டத்தின் முக்கிய பெறுநர் பாகிஸ்தானேயாகும். இந்த நிலையின் கீழ்  2023 டிசம்பர் 31இல் காலாவதியாகும்  பல பொருட்களுக்கு பூஜ்ய சதவீத வரியே உள்ளது.

தூதுவர் லாஹூர் வர்த்தக, தொழில்துறைக்கு  (Lahore Chamber of Commerce and Industry) வருகை

 தூதுவர், பாகிஸ்தான் தயாரிப்புகள் சிறந்தவை என்றும் அவை ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுக்கு இலகுவாகச் செல்லுமென்றும் கூறினார். புதிய தயாரிப்புகளும், கூட்டு முயற்சிகளும்  இந்த விடயத்தில் முக்கிய பங்கு வகிக்கும். பாகிஸ்தானை இந்த வியத்தில் ஒரு வெற்றி நாடாகவும் தூதுவர் அறிவித்தார்.

பாகிஸ்தான் உட்பட பங்காளர்களுடன் நாங்கள்  காலநிலை  மாற்றத்தின் பொதுவான சவாலை எதிர்கொள்ளத் தொடர்ந்து இணைந்திருப்போம் என்றும் அவர் கூறினார்.

 

இந்நிகழ்வில் பேசிய லாஹூர் வர்த்தக, தொழில்துறை தலைவர் மியான் நவுமான் கபிர் பாகிஸ்தானின் முக்கிய  வர்த்தக பங்காளர் ஐரோப்பிய ஒன்றியமே என்று கூறினார்.

 

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கான ஜிஎஸ்பி நிலையை 2023 டிசம்பர் 31 வரை நீடிப்பதூனது எங்கள் பொருளாதாரத்துக்கு பெரும் முக்கியத்துவமாகும் என்றும் கபிர் கூறினார்..

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .