2025 மே 09, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை

Freelancer   / 2025 மே 04 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் இருந்து எந்த பொருளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இந்திய கொடியுடன் எந்தவொரு கப்பல்களும் பாகிஸ்தான் செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல பாகிஸ்தான் கப்பல்களும் இந்தியாவுக்கு வர அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்து இருக்கிறது.

இந்திய கொடிகளுடன் வரும் எந்த கப்பல்களையும் பாகிஸ்தான் துறைமுகங்களில் அனுமதிக்க கூடாது என்றும் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்கள் இந்திய துறை முகங்களுக்கு செல்லக்கூடாது என பாகிஸ்தான் கடல்சார் விவகார அமைச்சகத்தின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் பிரிவு உத்தரவிட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கிறது. 

பொருளாதார நலன் மற்றும் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X