2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்து 22 மாணவர்கள் பலி

Editorial   / 2024 ஜூலை 14 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவில் இரண்டு மாடி பாடசாலைக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 22 மாணவர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டனர்.

வட-மத்திய ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ஜோஸ் நகரில்  (வெள்ளிக்கிழமை) வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இரண்டு மாடி பாடசாலைக் கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 22 மாணவர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 100 க்கும் மேற்பட்டவர்களை உள்ளூர் மக்களும், மீட்புப்படையினரும் இணைந்து மீட்டுள்ளனர்.

புசா புஜி என்ற சமூகத்திற்குச் சொந்தமான செயிண்ட்ஸ் அகாடமி கல்லூரியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் 15 வயது மற்றும் அதற்கும் கீழான வயதுள்ள மாணவர்கள். கட்டடம் இடிந்து விழுந்தபோது 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியதாகவும் அவர்களில் 22 மாணவர்கள் உயிரிழந்துவிட்டர் என்றும், 132 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X