Freelancer / 2025 பெப்ரவரி 23 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க பாதுகாப்பு துறையில் 5, 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக, ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா நாட்டின் மிகப்பெரிய துறையான இராணுவத்தில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அவர்களில் 8 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன் முதல்கட்டமாக தற்போது 5,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக, ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதில் பெரும்பாலானோர் வருடத்துக்கும் குறைவான அனுபவம் கொண்ட தகுதிகாண் நிலையில் உள்ளவர்கள் ஆவர். அதேசமயம் இராணுவ வீரர்களுக்கு இந்த பணிநீக்கத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வனத்துறையில் இருந்து 2,000 பேரும், உள்நாட்டு வருவாய் சேவை துறையில் இருந்து 7,000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.
இதனிடையே 5,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஜனாதிபதி ட்ரம்பின் முடிவுக்கு, அந்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago