2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாதுகாப்பு மறைவகத்துக்கு அனுப்பப்பட்ட முஸ்லிம் மனைவி

Freelancer   / 2022 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்த முஸ்லிம் மனைவி ஒருவரை பாகிஸ்தானின் மிர்புர்காஸின் 3ஆம் இலக்க நீதவான் நீதிமன்றம், சட்டெலைட் நகரிலுள்ள பாதுகாப்பான மறைவகத்துக்கு அனுப்புமாறு உத்தரவிட்டது.

மேலும், குறித்த பெண்ணின் கணவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மிர்புர்காஸ்-ஹைதராபாத் வீதியில் அமைந்துள்ள ஜுபைதா ஹைட்ஸ் என்ற இடத்தில் உள்ள அவர்களது குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில், நடாஷா என்ற குறித்த முஸ்லிம் பெண் கைது செய்யப்பட்டார்.

நகரின் ஹமீத்புரா பகுதியில் அனில் கைது செய்யப்பட்டதுடன், பொலிஸ் காவலில் ஒரு நாள் வைக்கப்பட்ட தம்பதியினர் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதன்போது,  தான் அனிலின் மனைவி என்றும் சில வருடங்களாக அவருடன் வாழ்ந்து வருவதாகவும் நடாஷா, நீதிமன்றத்தில் கூறினார்.

மேலும், விரைவில் இஸ்லாத்தை தழுவுவதாக அனில் தன்னிடம் உறுதியளித்ததாக அவர் தெரிவித்ததையடுத்து, மேற்குறிப்பிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X