2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பாப்பரசரின் நிலை கவலைக்கிடம்

Freelancer   / 2025 பெப்ரவரி 23 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், சுவாச கோளாறு காரணமாக கடந்த 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

வைத்திய பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனால் வத்திகான் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் கடந்துள்ள நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X