Editorial / 2019 ஜூன் 24 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷில் குறைந்தது 2,000 பேரைக் கொண்டிருந்த பயணிகள் ரயிலொன்று பாலமொன்றை கடக்கையில் இன்று (24) தடம்புரண்டமையில் ஐவர் கொல்லப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷின் கிழக்கு நகரமான சியல்ஹெட்டிலிருந்து தலைநகரான டாக்காவை நோக்கிச் செல்லும்போதே தண்டவாளத்தை விட்டு விலகியதாக பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஷாஜலால் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி படங்களின்படி, இரண்டு ரயில் பெட்டிகள் சேற்றுக் கால்வாயொன்றுக்குள் கவிழ்ந்து காணப்பட்டதுடன், வேறு மூன்று ரயில் பெட்டிகள் ரயில் பாதைக்கருகே புரண்டு காணப்பட்டிருந்தன. இந்நிலையில், வாழை மரங்கள், வயல்களால் நிறைந்து காணப்பட்ட சம்பவ இடத்தில் கிராமத்தவர்கள் குவிந்திருந்தனர்.
அந்தவகையில், ரயில் பெட்டிகளை மேலே தூக்குவதற்கு தூக்கிகளை மீட்புப் பணியாளர்கள் பயன்படுத்தியதாகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்காது என ரயில்வே அமைச்சின் செயலாளர் மொஃபஸல் ஹொஸைன் தெரிவித்துள்ளார்.
தடம்புரண்ட ரயில் பெட்டிகளுக்குள் தாங்கள் சோதித்ததாகவும், மேலதிகமாக சடலங்கள் எவையையும் கண்டுபிடிக்கவில்லை என மொஃபஸல் ஹொஸைன் மேலும் தெரிவித்துள்ளார்.
ரயில்வே விபத்துக்குகள் பங்களாதேஷில் வழமையாக நடக்கின்ற நிலையில், அவற்றில் பெரும்பாலனவை கண்காணிக்கப்படாத கடவைகளாலும், மோசமான ரயில் பாதைகளாலுமே ஏற்படுகின்றன.
இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற ரயில் பாதையானது நேற்று மாலையில் திறக்கப்பட வேண்டுமெனவும், விசாரணையொன்றுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என மொஃபஸல் ஹொஸைன் தெரிவித்துள்ளார்.
11 minute ago
18 minute ago
22 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
22 minute ago
48 minute ago