2025 நவம்பர் 05, புதன்கிழமை

பாலியல் தொல்லையை தடுத்த குடும்பத்தினர் மீது அசிட் வீச்சு; 16 பேர் காயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீகாரில் பாலியல் தொல்லையை தடுத்த குடும்பத்தினர் மீது அசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின், வைசாலி மாவட்டம் தவுத்நகரில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர் கும்பல் ஒன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. இதனை இளம்பெண்ணின் குடும்பத்தார் தடுத்துள்ளனர்.

இதனால் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த மற்றொரு கும்பல் அசிட்டை வீசி அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளது. 

அசிட் வீச்சில் 16 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 8 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணையை மேற்கொண்டுவரும் பொலிஸார் 5 பேரை கைது செய்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X