Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஒக்டோபர் 18 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலஸ்தீனத்தில் போரினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனுக்கு உடன் அடக்கம் செய்ய முடியாத நிலைமையொன்று அங்கு ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகள் மீதும் ஏவுகணை தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால், பலியாகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மரணமடைந்தவர்களின் உடல்கள், ஐஸ்கிரீம் வண்டிகளில் பாதுகாக்கப்படுகின்றது.
காஸாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், அப்பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலினால் இதுவரை 2,600க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் லட்சக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும், இதனால் அங்குள்ள வைத்தியசாலை நோயாளர்களால் நிரம்பிக்காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகள் நிரம்பியுள்ளதால் ஐஸ்கிரீம் வண்டிகளை தாம் பிணவறைகளாக மாற்றி வருவதாகவும் வைத்தியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .