2025 நவம்பர் 05, புதன்கிழமை

பிணை மனு மீதான விசாரணை: இம்மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரான ப. சிதம்பரம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை இம்மாதம் 23ஆம் திகதிக்கு இன்று (12) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய மத்திய விசாரணை முகவரகம் (சி.பி.ஐ) சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் நீதிமன்றக் காவல் உத்தரவை இரத்துச் செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனுவை இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரான ப. சிதம்பரம் திரும்பப் பெற்று கொண்டார்.

இதற்கிடையில் இந்த முறைகேடு தொடர்பாக சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் கே.வி.பெருமாளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கில் இவர் அரச சாட்சியாக மாறுவார் என சி.பி.ஐ. எதிர்பார்க்கிறது.

மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கு 2007ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப. சிதம்பரத்தின் மகனும் இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையின் உறுப்பினரான கார்த்தியின் தலையீட்டால் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X