2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

`பிணைக்கைதி` விமானம் விழுந்து நொறுங்கியது

Editorial   / 2024 ஜனவரி 24 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணைக்கைதிகளுடன் சென்ற இராணுவ விமானம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து இருநாட்டு எல்லையிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 

ரஷ்யா – உக்ரேன் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரேன் பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் இருந்து 65 உக்ரேன் பிணைக்கைதிகளுடன் ராணுவ விமானம் புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உக்ரேன் எல்லைப்பகுதியில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. கீழே விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்த வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விமானத்தில் உக்ரேன் பிணைக்கைதிகள் 65 பேர் மற்றும் 6 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 74 பேர் பயணம் மேற்கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், 74 பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

உக்ரேன் பிணைக்கைதிகளுடன் சென்ற ரஷ்ய விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்தும் ரஷ்ய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 உக்ரேன் பிணைக்கைதிகளுடன் சென்ற ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதால் இருநாட்டு எல்லையில் மேலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X