Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின், கொலை செய்யப்பட்ட தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒசாமா பின்லேடன், 2011 ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானிலுள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக, அமெரிக்க அறிவித்தது.
இதையடுத்து தனது தந்தையைக் கொன்றதற்காக, அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என, பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.
ஒசாமா பின்லேடனுக்கு பின்னர், அல்கொய்தா இயக்கத்தின் தலைவராகவும் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் முடி இளவரசராகவும் பார்க்கப்படும் ஹம்ஸா, பின்லேடனை கடந்த 2017ஆம் ஆண்டு, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது.
அன்று முதல் ஹம்ஸா பின்லேடனை அமெரிக்கா தேடி வரும் நிலையில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும் ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.
இதற்கிடையே, ஹம்ஸா பின்லேடனின் வசிப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் நாட்டு எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன், அமெரிக்க பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப் படையினரால் கொல்லப்பட்டாரென தெரிவித்துள்ளார்.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago