2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பிரதமராகிறார் கேப்ரியல் அட்டல்

Mithuna   / 2024 ஜனவரி 10 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022-ம் ஆண்டு  நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக பதவியேற்றார். ஆனால் பிரான்ஸ் அரசு கொண்டு வந்த ஓய்வூதிய கொள்கைகள், குடியேற்ற சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து இம்மானுவேல் மேக்ரானுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

மேலும் இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்த மேக்ரான் அரசு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. பிரான்ஸ் நாட்டின் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் திட்டமிட்டுள்ளார். இதனிடையே அந்நாட்டின் பிரதமராக இருந்த 62 வயதான எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந் நிலையில் பிரான்ஸ் நாட்டின் அடுத்த பிரதமராக 34 வயதான அந்நாட்டின் கல்வி மந்திரி கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்ரியல் அட்டல், தன்னை ஓர் ஓரினச்சேர்க்கையாளர் என வெளிப்படையாக அறிவித்தவர் ஆவர். அவர் பிரதமராக நியமிக்கப்பட்டால், பிரான்ஸ் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்ற சிறப்பையும், அதோடு பிரதமராக பதவியேற்கும் முதல் தன்பாலின ஈர்ப்பாளர் என்ற சிறப்பையும் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X