2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பிரதமர் பதவியை துறந்தார் ட்ரூடோ

Freelancer   / 2025 ஜனவரி 07 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்துள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் 9 ஆண்டுகள் கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ (வயது 53) செயற்பட்டு வந்தார்.

  அதேபோல், லிபரல் கட்சியின் தலைவராகவும் அவர் செயற்பட்டார்.

இதனிடையே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு அந்நாட்டு மக்களிடையே பெருமளவு குறைந்து வந்தது. மேலும், சொந்த கட்சிக்குள்ளும் செல்வாக்கு குறைந்தது.

கனடா பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில், கனடா மீது அதிகளவில் வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாட்டின் பொருளாதார சூழ்நிலை, சொந்த கட்சிக்குள் கடும் எதிர்ப்பு, பொதுமக்களிடம் ஆதரவு குறைவு உட்பட பல்வேறு காரணங்களால்,  பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ, திங்கட்கிழமை (6) இராஜினாமா செய்தார். 

அதேபோல், லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும், ட்ரூடோ இராஜினாமா செய்தார்.

இதேவேளை, நாட்டின் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, இடைக்கால பிரதமராக தான் தொடர்ந்து செயற்படுவதாக, ட்ரூடோ அறிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X