Editorial / 2019 செப்டெம்பர் 02 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவால் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது விண்கலமான சந்திராயான்-2 விண்கலத்தின் சந்திரனில் தரையிறங்கும் விக்ரம் விண்கலமானது, சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து திட்டமிட்டபடி பிற்பகல் பிரிந்துள்ளது.
அந்தவகையில், விக்ரம் விண்கலமானது எதிர்வரும் நான்கு நாட்களில் சந்திரனின் தென் பகுதியில் தரையிறங்கவுள்ளது. விக்ரம் விண்கலத்தில், சந்திரனின் மேற்பரப்பில் செல்லவுள்ள ஆறு சக்கரம் கொண்ட பிரக்யான் என்ற வாகனம் காணப்படுகிறது.
சந்திரனை விக்ரம் விண்கலம் அடைந்தவுடன், சந்திரனின் மேற்பரப்பை பெளதிக ரீதியாக ஆராய்வதற்காக, விக்ரமிலிருந்து பிரக்யான் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், ஏறத்தாழ எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை 1.55 மணியளவில் விக்ரம் விண்கலம் சந்திரனில் தரையிறங்கி, பிரக்யான் வாகனம் சந்திரனின் மேற்பரப்பை ஆராயத் தொடங்கும் எனக் கருதப்படுகிறது.
சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து விக்ரம் விண்கலமானது பிரிந்தவுடன், சந்திரனைச் சுற்றி 119 கிலோ மீற்றர் *127 கிலோ மீற்றர் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகின்றது. பின்னர், தனது சுற்றுவட்டப் பாதையை நாளை மறுதினமும், அதற்கு அடுத்ததினமும் குறைத்த பின்னர் தான் தரையிறங்க வேண்டிய பகுதி நோக்கி விக்ரம் பயணிக்கும்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago