2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பிரபல நடிகை திடீர் மரணம்

Freelancer   / 2025 பெப்ரவரி 17 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவின் பிரபல நடிகை கிம் ஸே-ரோன், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

 'Listen to My Heart', 'The Queen's Classroom' உள்ளிட்ட K-டிராமாக்களில் நடித்து பிரபலமானவர் கிம் ஸே-ரோன் (Kim Sae-Ron).

24 வயதான இவர், ஞாயிற்றுக்கிழமை (16), சியோலில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 

அவரது உடலைக் கைப்பற்றிய பின், இறப்பிற்கான காரணம் குறித்து

எதுவும் கண்டறியப்படவில்லை என, பொலிஸார் தெரிவித்தனர். 

கிம்மின் நண்பர் ஒருவர் கூறுகையில், "அவரது திடீர் மரணம் நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்காத ஒன்று. கிட்டார் மேன் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்த பிறகு, பணம் சம்பாதிப்பேன் என்று அவர் கூறினார்.

மேலும் ஒரு ஹோட்டலை திறக்க அவர் தயாராகி வந்தார். அதே சமயம் பொழுதுபோக்குத் துறைக்கு திரும்பவும் தயாராகி வந்தார். என்னால் இன்னும் அவரின் இறப்பை நம்ப முடியவில்லை" என தெரிவித்தார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X