2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பிரான்ஸில் இடதுசாரி கூட்டணி முன்னிலை

Freelancer   / 2024 ஜூலை 08 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ள நிலையில், தீவிரவலதுசாரி கட்சியான ஆர்எல் அதிகளவு ஆசனங்களை கைப்பறக்கூடும் என எதிர்பார்ப்பு வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் பிரான்சில் இடதுசாரி கூட்டணி அதிக ஆசனங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேசமயம் முதலாவது சுற்று தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதும் அதில் தீவிரவலதுசாரிகள் அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக பிரான்சில் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் முதல்தடவையாக தீவிரவலதுசாரிகள் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற அச்சநிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X