2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பிரான்ஸுக்கு அகதிகளை திருப்பி அனுப்பவுள்ள ஐக்கிய இராச்சியம்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டரீதியற்ற புலம்பெயரலைக் குறைக்கும் தனது திட்டங்களில் முக்கிய பகுதியொன்றாக, சிறிய படகுகளில் வந்தடைந்த சில அகதிகளை பிரான்ஸுக்குத் திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை சில நாள்களில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் தொடர்பான ஏற்பாடுகள் செவ்வாய்க்கிழமை (05) ஏற்றுக் கொள்ளப்பட்டமையையடுத்தே இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஒப்பந்தத்தின் கீழ் சிறிய படகுகளில் பிரித்தானியாவுக்குச் சென்ற ஆவணமில்லாதோரை மீள ஏற்க பிரான்ஸ் இணங்கியுள்ளதுடன் பதிலாக அதேயளவான பிரித்தானியக் குடும்பத் தொடர்புடைய சட்டரீதியிலான புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க பிரித்தானியா இணங்கியுள்ளது.

இவ்வாண்டில் 25,000க்கும் அதிகமானோர் பிரித்தானியாவுக்கு சிறிய படகுகளில் சென்றுள்ளனர்.

ஒப்பந்தத்தின்படி வாரமொன்றுக்கு 50 பேர் அல்லது ஆண்டொன்றுக்கு 2,600 பேர் அனுப்பப்படவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X