Editorial / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனில் உடல் நிலை மோசமடைந்து வருவதையடுத்து அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 51 ஆயிரத்து 608 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 373 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (வயது 55) கொரோனா பரவியிருந்தது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டார்.
ஆனால், வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் எற்படாமல் தற்போது அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது.
இதனால், தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago