Editorial / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸில் டெங்கால் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் 622 நோயாளர்கள் இறந்ததையடுத்து, பிலிப்பைன்ஸில் டெங்கு பரவுவதை, தேசிய தொற்றுநோய் பரவலொன்றாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
சிறப்பு விரைவு பதிலளிப்பு நிதியை உள்ளூர் அரசாங்கங்கள் பெறும் வகையில் டெங்கு பரவலுக்கான பதிலளிப்பை மேம்படுத்தும் வகையிலேயே பிலிப்பைன்ஸின் சுகாதாரத் திணைக்களத்தின் செயலாளர் மூன்றாம் ஃபிரான்ஸிஸ்கோ டுக்கே மேற்குறித்த பிரகடனத்தை மேற்கொண்டதாக பிலிப்பைன்ஸின் சுகாதாரத் திணைக்களம் நேற்றிரவு அறிவித்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 146,062 பேர் டெங்கால் பீடிக்கப்பட்டுள்ளமையை பிலிப்பைன்ஸ் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸின் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், இதே காலப் பகுதியில் கடந்தாண்டு டெங்கால் பிலிப்பைன்ஸில் பீடிக்கப்பட்டோரை விட 98 சதவீத அதிகரிப்பாக இவ்வாண்டு கால எண்ணிக்கை என்பதுடன், ஏறத்தாழ வாரமொன்றுக்கு 5,036 பேர் டெங்கால் பீடிக்கப்படுகின்றனர்.
மத்திய பிலிப்பைன்ஸ், வட தீவான லுஸன், தென் தீவானா மின்டானோ ஆகியவையே டெங்கால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதை கவனஞ் செலுத்தும் பிரசாரமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூன்றாம் ஃபிரான்ஸிஸ்கோ டுக்கே தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெங்கால் பாதிக்கப்படாத நோயாளர்களுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றதென டெங்குத் தடுப்புமருந்தான டெங்கவக்ஸியாவின் பிரெஞ்சுத் தயாரிப்பாளர் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்றிகோ டுட்டர்ட்டேயின் நிர்வாகம் அதைத் தடை செய்திருந்தது.
உலகளாவிய ரீதியிலுள்ள வெப்ப மண்டல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட நுளம்பால் தொற்றும் நோயே டெங்கு ஆகும். டெங்கால் மூட்டுக்களில் வலி, குமட்டல், வாந்தி, சொறி ஏற்படுவதுடன், மோசமான நிலையில் சுவாசப் பிரச்சினைகள், இரத்தப்போக்கு, உடலுறுப்புகள் விளங்காமல் போதலும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டெங்கால் பாதிக்கப்பட்டதற்கு குறிப்பாக சிகிச்சையெதுவும் இல்லையென்றபோதும், பாதிக்கப்பட்டவரின் நீர் மட்டங்களை பேணுவதற்கான வைத்திய சிகிச்சையைப் பெறுவது முக்கியமானது.
11 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago